Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்றாவின் புத்தகம் வேதப் பாடம் 5 சபையின் எழுப்புதலுக்கான ஆறு படிகள்
உங்கள் சிந்தனைக்கு

எஸ்றாவின் புத்தகம்

வேதப் பாடம் 5
சபையின் எழுப்புதலுக்கான ஆறு படிகள்

பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் வெறும் வரலாற்று நிகழ்வுகளாக மட்டுமே வாசிக்கக் கூடாது. அவற்றை புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் வைத்து தியானிக்கும்போது தான், கர்த்தர் ஏன் அந்த புத்தகத்தை வேதமாக நமக்குக் கொடுத்திருக்கிறார் என்ற தெய்வீக நோக்கம் நமக்கு வெளிப்படும்.

அவ்வாறு எஸ்றாவின் புத்தகத்தை நான் ஆழ்ந்து தியானித்த போது, என்னுடைய கண்களுக்கு தென்பட்டது ஒரே ஒரு முக்கியமான உண்மை தான்.

மிகவும் சிறப்பாகவும், மகிமையாகவும் சாலொமோன் கட்டிய ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து பிடுங்கப்பட்டு, பாபிலோன் தேசத்திற்கு சிறைக் கைதிகளாகவும் அடிமைகளாகவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

ஆனால் அந்த நிலைமையில் கூட, ஒரு இனம் எவ்வாறு மறுபடியும் தங்கள் தேசத்திற்கு திரும்பி, தகர்க்கப்பட்ட ஆலயத்தை புதுப்பித்து, முதலில் பலிபீடத்தை கட்டினார்கள் என்பதே எஸ்றா புத்தகத்தின் மையக் குரல்.

இந்த நிகழ்வுகளை இன்றைய சபைகளின் அவலமான சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.

நான் அறிந்தவற்றையும் பார்த்தவற்றையும் வைத்து சொல்கிறேன்:

1960–70 களில் தொடங்கி, ஏறக்குறைய 30 ஆண்டுகள், ஆண்டவருடைய ஊழியம் மிகச் சிறப்பாக வளர்ந்தது.

அறியப்படாத ஆத்துமாக்களுக்கான உள்ள தாகம்,
வேத வசனத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஆவல்,
சுயநலமில்லாத ஆவிக்குரிய தலைவர்கள்,
பரிசுத்தம், பக்தி, வைராக்கியம் ஆகியவற்றுக்கான முக்கியத்துவம்
இவைகள் அனைத்தும் அன்றைய சபைகளின் அடையாளமாக இருந்தன.

ஆனால் இன்றைக்கு அவை ஒரு அனுபவமாக அல்ல, ஒரு பார்வைப் பொருளாக மாறிவிட்டது என்பதே வேதனையான உண்மை.

இந்த அடிப்படையில், எஸ்றாவின் புத்தகத்தை தியானிக்கும்போது, சபை தன்னுடைய பழைய நிலைக்கு திரும்புவதற்கு தேவையான ஆறு முக்கிய காரியங்களை நான் தெளிவாகக் காண்கிறேன்.

சபையின் மறுமலர்ச்சிக்கான ஆறு அடிப்படை காரியங்கள்:

1️⃣ Repentance – மனந்திரும்புதல்
“இன்றைய இந்த ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு நானும் காரணம்” என்ற மனவருத்தம்.
2️⃣ Confession – பாவ அறிக்கை
மனந்திரும்புதலின் இயல்பான வெளிப்பாடாக வரும் நேர்மையான பாவ அறிக்கை.
3️⃣ Prayer – ஜெப வாழ்க்கை
பழைய நிலைக்கு திரும்ப வருவதற்கான கண்ணீர் நிறைந்த, உடைந்த ஜெபங்கள்.
4️⃣ Word of God – வேத வார்த்தை
நம் வாழ்க்கையின் மையமாக வேத வசனத்திற்கு மீண்டும் இடம் கொடுப்பது.
5️⃣ Obedience – கீழ்ப்படிதல்
வேத வசனத்தை அறிந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கை.
6️⃣ Faith – விசுவாசம்
மறுபடியும் நம் தேசத்தில், குறிப்பாக தமிழகத்தில், பழைய எழுப்புதல் வரும் என்ற அசைக்க முடியாத விசுவாசம்.

இந்த ஆறு காரியங்களும் எஸ்றாவின் புத்தகத்தில் தெளிவாக உறுதிப்படுத்தப்படுகின்றன:

*பலிபீடம் கட்டுதல்
எஸ்றா 3:3,4

பாவ அறிக்கை – எஸ்றா 9:6,7; 10:11

*ஜெபம் –
எஸ்றா 3:2

வேத வசனத்திற்கு திரும்புதல் – எஸ்றா 3:2,7; 10

கீழ்ப்படிதல் – எஸ்றா 3:3,4

விசுவாசம் – எஸ்றா 5:1,2

பலிபீடம் முதலில் ஆலயம் பிறகு.
இதுவே எஸ்றாவின் புத்தகம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் அடிப்படை சத்தியம்.

உண்மையாகவே நாம் தமிழகத்தை நேசிப்போமென்றால்,
சபைகளின் உட்பிரிவுகளைத் தாண்டி நேசிப்போமென்றால்,
ஒவ்வொரு விசுவாசியும் இந்த ஆறு காரியங்களை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்,
ஆண்டவருடைய ராஜ்ய வளர்ச்சிக்கு கர்த்தர் அவர்களைப் பயனுள்ள பாத்திரங்களாக பயன்படுத்துவார்.
இது உண்மை.
இது வேத சத்தியம்..