Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

லோத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்
லோத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்.
அவன் ஆபிரகாமை விட்டு பிரிந்து தனி வழி சென்றது பெரிய தவறல்ல.
ஏனென்றால் எல்லா நிலைகளிலும் இரண்டு பேர் ஒற்றுமையாக செயல்படுவது என்பது முடியாத காரியம்.
இரண்டு பெரும் தலைவர்கள் பிரிந்து போகிற காரியத்தை வேதம் அனுமதிக்கிறது.
பர்னபா பவுலை ஊழியத்துக்கு அறிமுகப்படுத்தினாலும், அந்தியோகியா சபைக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தாலும் அவர்கள் கடைசி வரை ஒரே நிலையில் செல்லவில்லை.
பேதுரு இயேசுவால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலனாக காணப்பட்டாலும் அவரும் பவுலும் எல்லா காரியங்களிலும்ஒத்துப் போகவில்லை.
எனவே மிகப் பெரிய இரண்டு பேர் ஒரே வழியில் பயணம் செய்வது என்பது கூடாத காரியம்.
அது தவறான செயல் அல்ல.
லோத்து சோதோம் கொமோராவை தெரிந்தெடுத்த அந்த தெரிவுதான் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தியது.
விளைவு தேவனுக்கு விரோதமாக ,இஸ்ரேல் ஜனங்களோடு எப்பொழுதும் போராடுகிற இரண்டு மிகப்பெரிய சந்ததிகளை(அம்மோன், மோவாபியர்கள்) உருவாக்கியது.
உலகத்தோடு சமரசம் செய்து சோதோம் கொமோராவை தெரிந்து கொண்ட இந்த செயல் தேவனுக்கு விரோதமாகவே மாறிவிட்டது .
சில வேலைகளில் நாம் எடுக்கிற சில தீர்மானங்கள், உலகத்தோடு சமரசம் செய்து கொண்டிருக்கிற காரியங்கள் நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு அந்த காரியங்கள் தேவனுடைய இராஜ்ஜியவிருத்திக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது லோத்தின் மூலமாக நாம் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காரியம்