தேவன் தம்முடைய வல்லமையை* *மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதிலும் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார்
*தேவன் தம்முடைய வல்லமையை* *மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதிலும் இறையாண்மையுள்ளவராக இருக்கிறார்.*
மெத்தூசலா தன் சமகாலத்தவர்களை எல்லாம் விட நீண்ட ஆயுளுடன் வாழும்படி தேவன் ஏன் அவனுக்கு அத்தகைய உயிர்சக்தியை அளித்தார்? *
சிம்சோன் மற்ற எந்த மனிதனும் பெற்றிராத அளவிலான உடல் பலத்தைப் பெறும்படி தேவன் ஏன் அவனுக்கு அந்த வல்லமையை அளித்தார்?
மேலும், “உன் தேவனாகிய கர்த்தரே உனக்குச் சம்பத்தைக் சம்பாதிக்க வல்லமையைக் கொடுக்கிறவர் என்பதை நினைவு கூர்” (உபாகமம் 8:18) என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தேவன் அந்த வல்லமையை எல்லோருக்கும் ஒரே அளவில் அளிப்பதில்லை. ஏன்? ஏன் அவர் மோர்கன், கார்னகி, ராக்கெஃபெல்லர் போன்ற மனிதர்களுக்கு அத்தகைய செல்வம் சம்பாதிக்கும் திறனை அளித்தார்?
இந்த *எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றே: தேவன் இறையாண்மையுள்ளவர்; இறையாண்மையுள்ளவராக இருப்பதால், அவர் தமக்குப் பிரியமானபடியே செய்கிறார்.
A.W.Pink