Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சங்கீதங்கள்* *வேத பாடம் 2* *சங்கீதம் ஒன்று.
*உங்கள் சிந்தனைக்கு.*

*சங்கீதங்கள்*

*வேத பாடம் 2*

*சங்கீதம் ஒன்று.*

*ஏன் இந்தப் பாடல் முதலாவதாக இந்தப் புத்தகத்தில் வருகிறது ?*
மற்ற சங்கீதங்களைப் போல தேவனைத் துதிப்பதற்கான அழைப்புடன் தொடங்காமல், வேதத்தைத் தியானிக்கும் மனிதனைப் பற்றித் தொடங்குகிறது.
பாடல் மூலம் தேவனைத் துதிப்பதற்கு முன்பதாக, வேத தியானம் எவ்வளவு அவசியம் என்பதை இந்த சங்கீதம் விளக்குகிறது.
*சங்கீதப் புத்தகம் நம்மை முதலில் பாடவும் துதிக்கவும் சொல்லவில்லை;* *முதலில் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்க சொல்கிறது* .
*தேவனுடைய வார்த்தையில் பிரியம் கொண்டு, அதைத் தியானித்து, அதன்படி வாழ்கிற மனிதனே பாக்கியவான்.*
சங்கீதம் 1-ல் பாக்கியத்தின் அடிப்படை வேத தியானமாகும்.

*வேதத்தைத் தியானிக்காமல் வெறுமனே ஆராதிப்பது தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆராதனை அல்ல.* *தேவனுடைய வார்த்தையில் பிரியம் கொண்டு,* *அதைத் தியானித்து, அதன்படி நடந்து துதிக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.*
*நம்முடைய ஆவிக்குரிய பயணம் வேத வாசிப்பிலிருந்து தொடங்க வேண்டும்* .
வேதத்தைத் தியானிப்பதன் மூலமாகத்தான் தேவனுடைய சித்தத்தை அறிய முடியும். கடவுளுடைய கட்டளைகளை அறிய முடியும். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
வேத வார்த்தைகள் மூலமாகத்தான் கடவுள் நம்மோடு பேசுகிறார்.
வேத வசனத்தைக் கொண்டுதான் சாத்தானை எதிர்த்து நிற்க முடியும்.
வேத வசனத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் ஜெபிக்க முடியும். கடவுளை ஆராதிப்பதற்கும் வேத வசனமே ஆதாரம்.
வேத தியானம் இல்லாமல் ஆவிக்குரிய வளர்ச்சி என்பது கிடையாது.
வேத தியானம் இல்லாமல் ஆராதனைக்குச் செல்வதோ, காணிக்கை கொடுப்பதோ, சாத்தானின் மீது நமக்குள்ள வெற்றியோ—இப்படி எந்த ஆவிக்குரிய முன்னெடுப்பும் நமக்கு எந்தப் பயனும் தராது.
வேத ஞானம் இல்லாமல், தியானம் இல்லாமல், நாம் மற்றவர்களுக்குப் பயனுள்ள பாத்திரமாக இருக்க முடியாது.
ஆவிக்குரிய அத்தனை நிகழ்வுகளுக்கும் அடிப்படை வேத வாசிப்பும் வேத தியானமும்தான்.
எனவேதான், வேத தியானத்தை முக்கியப்படுத்தும் இந்தப் பாடல் சங்கீதப் புத்தகத்தில் முதல் பாடலாக அமைந்திருக்கிறது.
சங்கீதப் புத்தகத்தில் 1, 19, 119 ஆகிய சங்கீதங்களில் வேத தியானத்தின் மேன்மையைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 119ஆம் சங்கீதத்தில் 176 வசனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையான வசனங்கள் வேதத்தின் மகத்துவத்தையும், வேதத்தைத் தியானிப்பதன் அவசியத்தையும் குறிப்பிடுகின்றன.
இதுவே வேதத்தின் மேன்மையையும் அதனுடைய தியான அவசியத்தையும் வலியுறுத்துவதற்காக இந்த சங்கீதம் முதலாவதாக வருவதற்கான காரணமாகும்.
வேத வசனத்தைத் தியானிக்காத ஒருவரை ஒரு விசுவாசியாகவோ, ஆராதனை வீரனாகவோ, ஆராதனை நடத்துபவராகவோ, ஒரு போதகராகவோ, மேய்ப்பராகவோ கருத முடியாது.
வேதத்தைப் படிப்பது என்பது வேறு; தியானிப்பது என்பது வேறு.
நேரம் எடுத்துக்கொண்டு வசனத்தைத் தியானிக்க வேண்டும்.
வெறுமனே, “ஆறு மாதத்திற்குள் நான் வேதத்தைப் படித்துவிட்டேன்”, “ *ஒரு வருடத்திற்குள் வேதத்தை மூன்று முறை படித்துவிட்டேன்* ” *என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் மேன்மையான காரியம் இல்லை.*
*எத்தனை வசனங்களைப் படித்தோம் என்பது அல்ல முக்கியம்; வசனத்தை எந்த அளவுக்குத் தியானித்து, அதன்படி நடக்கிறோம் என்பதுதான் சிறப்பானது.*
*வேதத்தைத் தியானிக்கக்கூடிய ஒரு சந்ததியை கடவுள் தேடிக்கொண்டிருக்கிறார்*
.