Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

வேத பாடம் 4 *தியானப் பகுதி: சங்கீதம் 1
*உங்கள் சிந்தனைக்கு.*

*சங்கீதங்கள்*

*வேத பாடம் 4*

*தியானப் பகுதி: சங்கீதம் 1*

*இந்த சங்கீதம் KJV-ல் “Blessed” என்று ஆரம்பித்து, இறுதியில் “perish* ” *என்று முடிகிறது.*
*இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான காரியங்கள்:*
*மனிதனாகப் பிறந்த எவரும் கடவுளுடைய பார்வையில் ஆசீர்வாதமாக வாழ வேண்டும். அப்படி அவர்கள் ஆசீர்வாதமான, தேவனுக்குப் பிரியமான பாதையைத் தெரிந்துகொள்ளாவிட்டால், அவர்கள் அழிவைத் தெரிந்துகொள்கிறார்கள்.*
இதுதான் ஒவ்வொரு மனிதகுலத்திற்கும் தேவன் வைத்திருக்கக்கூடிய ஒரு தேர்வு.
ஒன்று நாம் கோதுமை மணியாக இருக்க வேண்டும் அல்லது களையாக இருக்க வேண்டும்.
ஒன்று நல்ல விதையாக இருக்க வேண்டும் அல்லது பதராக காணப்பட வேண்டும்.
ஒன்று வெள்ளாடுகளாக நாம் காணப்பட வேண்டும் அல்லது ஆடுகளாக காணப்பட வேண்டும்.

(Sheep – Goats)
முதலாவது சங்கீதத்தில் முதல் மூன்று வசனங்கள், ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையில் காணப்பட வேண்டிய காரியங்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.
இறுதி மூன்று வரிகள், ஆசீர்வாத வாழ்க்கையை இழந்த துன்மார்க்கர்களுடைய இறுதி முடிவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.
*Eternal Blessing*

*Eternal Punishment*
*These are the two destinies available to every* *human being. There is no third way.*

*நீதிமான்களுடைய ஆவிக்குரிய “root system” மிகவும் ஆழமானது. அதே வேளையில்* , *தேவனை அறியாதவர்கள் பதரைப் போன்று காற்றில் பறந்து போய்விடுவார்கள்* .
கடவுளை நிராகரிக்கிற மக்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் நிலைத்து நிற்க மாட்டார்கள். அவர்களுக்கு அக்கினிக்கடலே முடிவாக இருக்கும்.
வேதத்தைத் தியானித்து, அதன்படி நடக்கிற தேவனுடைய பிள்ளைகளுக்கோ, அது ஒரு நியாயத்தீர்ப்பாக இல்லாமல், தங்கள் வாழ்நாளில் செய்யப்பட்ட பாடுகளுக்குப் பரிசுகள் பெறுகின்ற நிகழ்வாக மாறிவிடும்.
இந்த உலகத்தின் பார்வையில் தேவனுடைய பிள்ளைகள் பதரைப் போல் மதிப்பற்றவர்களாகக் காணப்படலாம்.
உலகத்தின் பார்வையில் செல்வந்தர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும், அதிகாரத்தைச் சுவைத்தவர்களாகவும் காணப்படலாம். ஆனால் அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முன் நிற்க முடியாது.
சங்கீதம் உணர்த்தும் ஆழமான பாடம்
மனிதன் எதைச் சிந்திக்கிறான், எதை நேசிக்கிறான், யாருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறான் என்பதே அவனுடைய வாழ்க்கையின் வழியையும் இறுதி முடிவையும் தீர்மானிக்கிறது.
ஆகவே, உண்மையான ஆசீர்வாதத்தின் ஆரம்பம் தேவனுடைய வார்த்தையில் மகிழ்ந்து, அதைத் தொடர்ந்து தியானித்து, அதன்படி வாழ்வதில் இருக்கிறது.