Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Expository Commentary on the Book of Ezra – வேதபாடம் 21
உங்கள் சிந்தனைக்கு.

Expository Commentary on the Book of Ezra – வேதபாடம் 21

பழைய ஏற்பாட்டில் மிகச் சிறந்த வேத போதகரில் ஒருவராக எஸ்ராவை குறிப்பிடுவது மிகையாகாது.
அவர் வேதத்தை ஆராய்ந்து கற்றார்; கற்றதைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினார்; மேலும், தாம் வாழ்ந்ததை மக்களுக்குப் போதித்தார்.
இந்த மூன்று முக்கியமான அம்சங்களும் ஒரே வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படுவது எஸ்ராவைப் பற்றியே காணப்படுகிறது.
பெர்சிய அரசனான அர்தசஷ்டா, எஸ்ராவை பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு அனுப்பியபோது அவனுக்கு வழங்கிய கட்டளை மிகவும் முக்கியமானது:
“எஸ்றாவாகிய நீ, உன்னிடமுள்ள உன் தேவனின் ஞானத்தின்படி, நதிக்குப் பிற்புறம் வசிக்கும் மக்களில் தேவனுடைய சட்டங்களை அறிந்திருப்போருக்கு நீதி வழங்கும்படி நீதிபதிகளையும் உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாதவர்களுக்கு நீ கற்பிக்க வேண்டும்.
உன் தேவனுடைய சட்டங்களுக்கும், அரசனுடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவன் மரண தண்டனைக்கோ, நாடுகடத்தப்படலுக்கோ, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலுக்கோ, சிறைத்தண்டனைக்கோ உட்படுத்தப்படுவான்.”
(எஸ்றா 7:25–26)
சுருக்கமாகச் சொல்வதானால், மக்கள் மோசேயின் பிரமாணங்களின்படி நடத்தப்பட வேண்டும் என்பதே அரசனின் நோக்கம்.
எஸ்ரா எருசலேம் வந்தபோது, அவரை மிகுந்த துக்கத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய ஒரு செய்தியை அறிந்தார். அது என்னவெனில்:
இஸ்ரவேல் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோர் தங்களை அயலின மக்களிடமிருந்து பிரித்துக் கொள்ளாமல், அவர்களுடைய அருவருப்பான செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகியோரின் மகள்களைத் தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் மனைவிகளாக எடுத்துக் கொண்டார்கள்.
இதனால் பரிசுத்தமான ஜனங்கள் அயலின மக்களுடன் கலந்துவிட்டார்கள். அதிலும் மிகுந்த துக்கமான விஷயம் என்னவென்றால், இந்தத் துரோகச் செயலுக்கு தலைவர்களும் அதிகாரிகளுமே முன்வந்திருந்தார்கள். (எஸ்றா 9:2–3)
இந்த செய்தியை கேட்ட எஸ்ரா தன் உடையையும் அங்கியையும் கிழித்து, தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கி, அதிர்ச்சியுடன் நிலத்தில் உட்கார்ந்தார்.
அவருடைய மன வேதனையும், ஜனங்களுக்காக அவர் செய்த பாவங்கொணர்ந்த ஜெபத்தையும் எஸ்றா 9ஆம் அதிகாரத்தில் தெளிவாக காணலாம். அவர் ஜனங்களின் பாவங்களை தன் பாவங்களாக ஏற்று தேவனிடம் மன்றாடினார்.
புதிய ஏற்பாட்டு சபைக்கு கிடைக்கும் பாடம்
விசுவாசிகள் “பிரித்தெடுக்கப்பட்டவர்கள்” என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
“ அந்நிய நுகம்” ( Unequally yoked) என்பது :
விசுவாசி + அவிசுவாசி இணைப்பு
தேவனை மையமாகக் கொள்ளாத உறவு
இது நடைபெறும் முக்கியமான துறைகள்:
திருமணம்
நெருங்கிய கூட்டுறவு
வணிக கூட்டாண்மை
வாழ்க்கைத் தீர்மானங்கள்
பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை என்பது பழைய ஏற்பாட்டிற்கே மட்டும் அல்ல; புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும் அது பொருந்தும்.
அதைப் பற்றி பவுல் தெளிவாகக் கூறுகிறார்:
“அவிசுவாசிகளுடன் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநீதிக்கும் இடையில் என்ன உடன்பாடு? ஒளிக்கும் இருளுக்கும் என்ன இணக்கம்? கிறிஸ்துவுக்கும் பெலியாலுக்கும் என்ன ஒற்றுமை? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் என்ன பங்கு? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன உடன்பாடு? நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.”
(2 கொரிந்தியர் 6:14–16)
இன்றைய நிலை மற்றும் எச்சரிக்கை
இன்றைய சபைகளில் காணப்படும் சீரழிவுக்கும் ஆவிக்குரிய வல்லமை குறைவுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று இதுவாகும்.
தேவனை அறிந்த மக்கள்:
திருமணத்தில்
வணிகத்தில்
உறவுகளில்
அவிசுவாசிகளுடன் இணைந்து, தேவனுடைய சித்தத்தை மீறுகின்றனர்.
விசுவாசிகள் பிரித்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்; அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.
“ We should be separated, but not secluded .”
தலைமுறை சவால்
முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் வைராக்கியமாக இருக்கிறார்கள்.
ஆனால் அடுத்த தலைமுறை, முன்னோர்களின் பாதையை விட்டு விலகி உலகத்துடன் கலந்து விடுகிறது.
இதனால்:
குடும்பத்தின் ஆன்மீக உறவு குறைகிறது
தேவனுடன் இருந்த உறவு தலைமுறைக்கு கடந்து செல்லாது
பெற்றோர் மற்றும் சபையின் பொறுப்பு
சபையின் பொறுப்பு:
பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை தெளிவாக போதிக்க வேண்டும்

அதன் அவசியத்தை விசுவாசிகளுக்கு உணர்த்த வேண்டும்
அதைக் கடைப்பிடிக்காததின் விளைவுகளை எடுத்துக்கூற வேண்டும்
பெற்றோரின் பொறுப்பு:
“திருமணம் குழந்தைகளின் விருப்பம்” என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கக்கூடாது
பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும்
அவர்களை போதிக்க வேண்டும்
சரியான பாதையில் நடத்த வேண்டும்
வேதாகம எச்சரிக்கை
இஸ்ரவேல் மக்கள் மோவாபிய பெண்களுடன் கலந்துகொண்ட சம்பவம் (எண்ணாகமம் 25) கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. சுமார் 24,000 பேர் மரித்தனர்.
இது தேவனுடைய பரிசுத்தத்திற்கான தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
முடிவு
ஒவ்வொரு போதகரும் தங்களை எஸ்ராவாகக் கருத வேண்டும்.
ஒவ்வொரு தந்தையும் தாயும் தங்கள் குடும்பத்தில் எஸ்ராவாக இருக்க வேண்டும்.*
புறஜாதி கலப்பு நிகழாமல் காக்கப்பட்டால்:
சபையின் பரிசுத்தம் காக்கப்படும்
சபை வல்லமையுடன் விளங்கும்
திருமணம் மட்டும் அல்ல:
வணிகம்
அரசியல்
உலக சிநேகம்
உலக சிந்தனை
இவைகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பல சவால்களுக்கிடையே யூதர்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தை பாதுகாத்ததுபோல், நாமும் நமது விசுவாசத்தை பாதுகாக்க வேண்டும்.
இறுதி சிந்தனை:
நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில், நமது குடும்பங்களில்,
“ எஸ்ராவாக” வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.