Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

காதேஸ் பர்னேயாவில் நாம் கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான பாடம்
*உங்கள் சிந்தனைக்கு:*

*காதேஸ் பர்னேயாவில் நடந்த நிகழ்வு என்பது இஸ்ரவேலருடைய வரலாற்றில்* *மிகப்பெரிய சோக நிகழ்வாகும்.*

*அந்த நிகழ்வு ஓராண்டோ, இரண்டாண்டோ அல்ல; 38 ஆண்டுகள் அந்தச் சோக நிகழ்வு தொடர்ந்து கொண்டே* *இருந்தது* .

*ஏறக்குறைய 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் அந்தக் கால இடைவெளியில் மரித்துப் போனார்கள்* .

*குறிப்பாக, 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அந்த வனாந்தரத்தில் மரித்தார்கள்* .

*ஒரு வருடத்திற்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு அடக்க ஆராதனை நடைபெற்றது* .

*ஒரு நாளுக்கு 85 அடக்க ஆராதனைகள் நடைபெற்றதாக* *வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது* .

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், *ஒரு மணி நேரத்திற்கு ஏழு பேர் மரித்தார்கள்* .

> *"Figuring 1,200,000 (600,000 of both men and women) as having to die in 14,508 days (38½ years), gives 85 per day. Figuring 12 hours per day maximum for funerals, gives an average of seven funerals per hour for all 38½ years, a continuous foreboding reminder of God's punishment upon them."*
> *(A Survey of Israel's History, p. 159, quoted in Wilmington's Guide to the Bible)*

இந்த அளவுக்குத் தேவன் தாம் அழைத்த மக்களை, வாக்குறுதி கொடுத்து எகிப்திலிருந்து விடுதலை செய்து கொண்டுவந்த மக்களை அழிக்கக் காரணம் என்ன?

*முதல் காரணம், இஸ்ரவேல் மக்களின் தொடர்ச்சியான கலகமே.*

*ஏறக்குறைய பத்து தடவைகள் அவர்கள் ஆண்டவரைத் துக்கப்படுத்தினார்கள்* .

அவர்களை அவ்வப்போது கண்டித்து தண்டனை கொடுத்தாலும், அந்தத் தண்டனையிலிருந்து அவர்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

ஒரு கட்டத்தில், இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பதிலாக மோசேயைத் தேர்ந்தெடுத்து, அவன் மூலமாக அவனைப் பெரிய ஜாதியாக்க தேவன் முன்வந்தார்.

அடுத்ததாக, அவர்களுடைய *நியாயமற்ற முறுமுறுப்பே காரணமாக* *இருந்தது* .

தண்ணீருக்காகவும், இறைச்சிக்காகவும் அவர்கள் *தேவனிடம் விண்ணப்பித்திருக்கலாம்; மன்றாடியிருக்கலாம்* ; *கேட்டிருக்கலாம்* . *ஏனெனில், அவர்களை அழைத்தவர் அவரே* அல்லவா?

ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் முறுமுறுத்தார்கள்.

*அந்த முறுமுறுப்பு எல்லை மீறி, "ஏன் எங்களைக் கொண்டு வந்தீர்?" என்று வானத்தையும் பூமியையும்* *படைத்த ஆண்டவரையே கேள்வி கேட்கும் அளவுக்கு சென்றது* .

காலேப் மற்றும் யோசுவாவை முழு சபையாரும் கல்லெறிந்து கொல்ல முன்வந்தார்கள்.

*அவர்கள் மிகப்பெரிய கலவரத்தை நடத்தினார்கள்.*

*லூசிபர் எவ்வாறு தேவதூதர்களைத் திரட்டி கலகம் செய்து விழுந்துபோனானோ, அதே மனநிலையோடு* *இவர்களும் செயல்பட்டார்கள்.*

எனவேதான், அவர்களுடைய பாவத்திற்கு ஏற்ற கடுமையான தண்டனையை தேவன் நியமித்தார்.

அவர்கள் முறுமுறுத்தி, "எங்கள் பெண்களும் பிள்ளைகளும் மடிந்துபோவார்கள்" என்று புலம்பினார்களோ, அதே தண்டனையை அவர்களுக்கே தேவன் கொடுத்தார்.

*நாமும் நம்முடைய வாழ்க்கையில், அவ்வப்போது தேவன் கொடுக்கும் சிட்சையை உணர்ந்து, அதிலிருந்து* *பாடம் கற்று, மிகப்பெரிய தண்டனையைத் தவிர்க்க வேண்டும்.*

*தேவனுக்கு எதிரான முறுமுறுப்பில் நம்முடைய நாவைக் கட்டுப்படுத்த வேண்டும்* .

" *அவர் நம்முடைய தேவன்" என்ற சிந்தனையோடு நம்முடைய கவலைகளை அவரிடம் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்* , *நம்முடைய முறுமுறுப்புகள் அளவுக்கு மீறிப் போகக் கூடாது.*

இதில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

காதேஸ் பர்னேயாவில் நாம் கற்றுக்கொள்ளும் மிக முக்கியமான பாடம் இதுவே..