Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தியானப் பகுதி:* சங்கீதம் 1:1–2
*உங்கள் சிந்தனைக்கு.*

*சங்கீதங்கள்*

*வேத பாடம் 3*

*தியானப் பகுதி:*

சங்கீதம் 1:1–2
*இந்த இரண்டு வசனங்களையும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்* *பார்க்கலாம்*
.
*Positive Side – நேர்மறைப்* *பார்வை*
*எந்தக் காரியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இரண்டாவது* *வசனம் சொல்கிறது.*

*Negative Side –*

*எதிர்மறைப் பார்வை*
எந்தக் காரியங்களைக் கடைப்பிடிக்கக்‌கூடாது என்று முதல் வசனம் சொல்கிறது.
முதல் வசனத்தை எதிர்மறைப் பார்வையில் பார்க்கலாம். தேவனுடைய பிள்ளை மூன்று காரியங்களைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று அது சொல்கிறது:
*துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது* .
*பாவிகளுடைய வழியில் நிற்கக்கூடாது*
.
*பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்காரக்கூடாது*.
சர்ப்பத்தின் மூலம் சாத்தான் கொடுத்த ஆலோசனையைக் கேட்டு, தடைசெய்யப்பட்ட கனியைத் தானும் சாப்பிட்டு, ஆதாமுக்கும் கொடுத்து, அவனையும் சாப்பிட வைத்ததால், மிகப்பெரிய கீழ்ப்படியாமை என்ற பாவத்திற்குள் ஆதாமும் ஏவாளும் சென்றார்கள். இதன் மூலம் வரப்போகும் சந்ததியும் பாவத்தின் விளைவுகளுக்குள் சென்றது.
“பாவிகளுடைய வழியில் நிற்கக்கூடாது” என்றால், பாவிகளுடைய வழிகளை ஏற்றுக்கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, அதில் வாழக்கூடாது என்று பொருள்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் லோத்து.
இயேசுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றபொழுது, பேதுரு எதிரிகளின் மத்தியில் உட்கார்ந்திருந்தான். அங்கே ஏற்பட்ட சூழ்நிலையில், பயத்தினாலும் அழுத்தத்தினாலும் இயேசுவை மூன்று முறை மறுதலித்தான்.
தேவனுக்குச் சித்தமில்லாத ஆலோசனையைக் கேட்பதும், தேவனுக்குச் சித்தமில்லாத இடத்தில் நிலைத்து நிற்க விரும்புவதும், தேவனுடைய வழிகளுக்கு மாறான உலகப்போக்குகளோடு தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் நேரத்தைச் செலவிடுவதும் தேவனுக்குப் பிரியமில்லாத செயல்கள்.
இரண்டாவது வசனத்தை நேர்மறையான பார்வையில் பார்க்கலாம்


*Positive Side – நேர்மறைப் பார்வை*
“கடவுளுடைய வார்த்தை” என்பது *ஆங்கிலத்தில் “Law of the Lord” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது* .
இங்கே “Law” என்பது வெறும் சட்டதிட்டம் என்ற குறுகிய பொருளில் மட்டும் அல்லாமல், தேவனுடைய போதனை, அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் என்ற பொருளையும் கொண்டுள்ளது.
தேவனுடைய கட்டளைகளையும் போதனைகளையும் அறிந்து, தியானித்து, அதன்படி நடப்பது என்பது ஒரு காரியம்.
*தேவனுடைய கட்டளைகளை வெறும் சட்டதிட்டங்களாகக் கருதி, அவற்றின் கீழ்* *கட்டாயமாக வாழ்வது என்பது வேறு.*

*புதிய ஏற்பாட்டுப் போதனைகளை வெறும் சட்டங்களாகக் கருதி* , *அவற்றிற்கு அடிமைப்பட்டு இருப்பதும் வேறு.*

உதாரணமாக:
காலையில் ஒரு அதிகாரம் கட்டாயம் படிக்க வேண்டும்;

ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்குச் செல்ல வேண்டும்;

தசமபாகம் கொடுக்க வேண்டும்;

காலத்திற்குப் பொருந்தாத பழைய ஏற்பாட்டு பண்டிகைகளையும் நடைமுறைகளையும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று ஒருவர் கருதுவது போன்றவை.
இவற்றைச் செய்யாவிட்டால் தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டோம் என்ற மனநிலையில் ஒரு விசுவாசி இருந்தால், அவன் அந்தச் செயல்களையே ஒரு கட்டாயச் சட்டமாகக் கருதுகிறான்.
அதே வேளையில், *புதிய ஏற்பாட்டுப் போதனைகளை உணர்ந்து, அறிந்து, தியானித்து, அவற்றின் உண்மையான நோக்கத்தின்படி வாழ்வது என்பது* *வேறு*
.
புதிய ஏற்பாட்டுப் போதனைகளை அறிந்து, அவற்றின் உண்மையான நோக்கத்தின்படி வாழ்கிறவன் கிறிஸ்துவுக்குள் உள்ள சுதந்திரத்தில் வாழ்கிறான். அவன் தேவனுக்குக் கீழ்ப்படிவது வெறும் சட்டத்தின் பயத்தினால் அல்ல; தேவனை நேசிக்கும் மனதிலிருந்து மனப்பூர்வமாகக் கீழ்ப்படிகிறான்.
எனவே, புதிய ஏற்பாட்டுப் போதனைகளை வெறும் சட்டதிட்டங்களாகக் கருதி, வெளிப்புறக் கட்டாயங்களாக மட்டும் கடைப்பிடிக்கக்கூடாது.
தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் வெறும் கடமையாக மட்டும் இருக்கக்கூடாது. தேவனை நேசிப்பதிலிருந்து வரும் மனப்பூர்வமான கீழ்ப்படிதலாக இருக்க வேண்டும்.
அதேபோல், நம்முடைய வேத வாசிப்பும் தியானமும் வெறும் கட்டாயப் பழக்கங்களாக இல்லாமல், தேவனுடைய வார்த்தையின் மீது உள்ள விருப்பத்தாலும் பிரியத்தாலும் செய்யப்பட வேண்டும்.
சங்கீதம் 1:2 கூறுவதுபோல், தேவனுடைய போதனையில் பிரியம்கொண்டு, இரவும் பகலும் அதைத் தியானிக்கும் வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.
எனவே, நம்முடைய வேத வாசிப்பும் தியானமும் வெறும் கட்டுப்பாடுகளாக இல்லாமல், தேவனுடைய வார்த்தையின் மீது உள்ள பிரியத்தினால் நாம் தேர்ந்தெடுத்து செய்யும் செயல்களாக இருக்கக் கர்த்தர் கிருபை செய்வாராக.


7397312322